Samenvatting van de aflevering
SriLankan Airlines நிறுவனம், கொழும்பு-பெர்த் இடையிலான நேரடி விமானசேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
SriLankan Airlines நிறுவனம், கொழும்பு-பெர்த் இடையிலான நேரடி விமானசேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
Afleveringen
கொழும்பு–பெர்த் நேரடி விமான சேவை குறித்து SriLankan Airlines பரிசீலனை
BeluisterdSriLankan Airlines நிறுவனம், கொழும்பு-பெர்த் இடையிலான நேரடி விமானசேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
What does it mean to be an upstander? - பிறரின் நலனுக்காகத் துணிந்து நிற்பது என்றால் என்ன?
BeluisterdAdvocacy groups and researchers have called for more upstander intervention to combat racism and discrimination. What happens when someone steps in to help? - ஒருவர் துன்புறுத்தப்படுவதையோ, இனவெறி அடிப்படையில் அவமதிக்கப்படுவதையோ நீங்கள் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்? #sbsaudiopodcast - #sbsaudiopodcast
இந்தவாரம் திறக்கப்படும் புதிய விமான நிலையம் – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை
Beluisterdமேற்கு சிட்னியில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ள நிலையில், விமானப் பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கவுள்ளன? விமானக் கட்டணங்கள், போக்குவரத்து இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 23 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை
BeluisterdSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 23/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (23 October 2026 - Friday)
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 17 – 23, 2026)
Beluisterdஇலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 17 – 23) என்று கடந்த 07 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 17 – 23, 2026)
வாம்பேட்: வளைகளில் வாழும் ஆஸ்திரேலிய அதிசயம்
Beluisterdஆஸ்திரேலியாவுக்கே உரித்தான தனித்துவமான விலங்குகளில் ஒன்று வாம்பேட். மார்சுபியல் விலங்குகளில் கங்காருவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விலங்காகக் கருதப்படும் வாம்பேட்டின் தனிச்சிறப்புகள் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். இந்த நிகழ்ச்சி முதலில் 2019 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது; தற்போது மீண்டும் போட்காஸ்டாக வழங்கப்படுகிறது. Wombat: One of Australia’s most unique animals
சாலைகளில் ஓடும் கார்கள் இனி வானிலும் பறக்குமா? Teslaவின் புதிய தொழில்நுட்பம்!
BeluisterdTesla நிறுவனம் புதிய Roadster கார் - பறக்கும் கார் ஒன்றை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது. இதனையடுத்து பறக்கும் வாகனம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தக் காரின் தொழில்நுட்பம் என்ன? இது உண்மையிலேயே பறக்குமா? இதன் விலை என்ன? என்று பல கேள்விகளுக்கான பதில்களை தொகுத்து வழங்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். Will cars soon take to the skies? Tesla’s new technology!
மகிழ்ச்சியான சுற்றுலா பயணத்திற்கு அவசியமான குறிப்புகள்!
Beluisterdவிடுமுறை காலம் ஆரம்பமாகியுள்ள இந்தவேளையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான சில ஆலோசனைகள் குறித்த கலந்துரையாடல். இதில் பங்குபெறுபவர்கள் பயண முகவர் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட யசோ ஷண்முகசோதி மற்றும் ஹோட்டல் வர்த்தகத்தில் பல வருடங்கள் அனுபவம் கொண்ட ரவி நானா. அவர்களோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast Travel tips for holiday travellers!
குழந்தையா, வேலையா? - 12 ஆண்டுகளாக மாறாத கர்ப்பகால பாகுபாடு
Beluisterd‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என்ற வார்த்தைகள் ஒரு குடும்பத்துக்கு மகிழ்ச்சியின் தொடக்கமாக இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவில் பல பெண்களுக்கு, இதே சொற்களை வேலையிடத்தில் சொன்ன நாளிலிருந்தே சிக்கல்கள் தொடங்குகின்றன, பதவி உயர்வு கை நழுவுகிறது, வேலை நேரம் குறைகிறது, சில நேரங்களில், வேலையே பறிபோகிறது. இது ஒரு சிலரின் கதை அல்ல - பரவலான, ஆழமான பிரச்சனை என்கிறது இந்த வாரம் வெளியான ஒரு தேசிய அறிக்கை. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 22 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை
BeluisterdSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 22/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
வன்முறை உறவிலிருந்து வெளியேறுவோருக்கான சட்டப் பாதுகாப்பும் நிதி உரிமைகளும்
Beluisterdகுடும்ப வன்முறை உறவிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பொருளாதார ரீதியாக உள்ள உரிமை என்ன? அதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் உதவிகள் யாவை? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் குடும்பச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு நிபுணரும் சட்டத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரும் Sun Legal நிறுவனத்தின் முதன்மை வழக்கறிஞருமான அபூர்வா சுந்தர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Legal protection and financial rights for those leaving domestic violence relationships
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த நிதி தேவையா? என்னென்ன தெரிவுகள் உள்ளன?
Beluisterdவணிகங்கள் வங்கிக்கடன் பெறுவது தொடர்பில் எமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Finance & Mortgage Broker குமரன் மதுரை அவர்கள்.அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 21 அக்டோபர் 2026, புதன்கிழமை
BeluisterdSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 21/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஞானசாரர் என்கின்ற பௌத்த துறவியின் விவகாரம்
Beluisterdநீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையிலடைக்கப்பட்டுள்ள பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஞானசார தேரர் விவகாரம்; அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பௌத்த பிக்குகள் போராட்டம். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
பெருநகரங்களிலிருந்து பிற பகுதிகளுக்குக் குடிபெயரும் ஆஸ்திரேலியர்கள்: காரணம் என்ன?
Beluisterdஆஸ்திரேலியர்கள் தொடர்ந்து முக்கிய தலைநகரங்களை விட்டு regional-பிராந்திய பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருவதாக புதிய தரவுகள் கூறுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
நாடாளுமன்ற உறுப்பினர் Helen Haines மீதான தாக்குதலை நடத்தியது யார்? பிந்திய தகவல்கள்
Beluisterdசுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் Helen Haines, விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் உள்ள தனது தொகுதி அலுவலகத்திற்கு வெளியே வாகனம் மோதியதில் ஆபத்தான நிலையில் உள்ளார். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் என வர்ணிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம் A warning this story contains distressing descriptions, please listen with care.
இன்றைய செய்திகள்: 20 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை
BeluisterdSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
How laws change, and why it takes time - சட்டங்கள் எவ்வாறு மாறுகின்றன, ஏன் அதற்கு காலம் தேவைப்படுகிறது?
BeluisterdHow do laws change in Australia? Through Rodney Croome’s campaigns for human rights and marriage equality, learn how personal stories, community action, courts and parliament can help change the law, and why the process can take time. - ஆஸ்திரேலியாவில் சட்டங்கள் எவ்வாறு மாறுகின்றன? மனித உரிமைகள் மற்றும் திருமண சமத்துவத்திற்காக Rodney Croome முன்னெடுத்த பிரச்சாரங்களின் வாயிலாக, தனிப்பட்ட கதைகள், சமூகச் செயல்பாடுகள், நீதிமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவை எவ்வாறு சட்ட மாற்றத்திற்கு உதவக்கூடும் என்பதையும், இந்தச் செயல்முறை ஏன் நீண்ட காலம் எடுக்கக்கூடும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to the series and find shorter versions in 60 languages on the How Australia Works main page. - How Australia Works என்பது ஒரு SBS வலையொலி (podcast) ஆகும். இது உண்மையான கதைகள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம்,…
மெல்பன் சிறுமி அம்ரிதாவின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் – மரண விசாரணை அறிக்கை
Beluisterdமெல்பன் Monash சிறுவர் மருத்துவமனையில், 2022ஆம் ஆண்டு உயிரிழந்த எட்டு வயது சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
மெல்பனில் மலரும் 'அஞ்சுவண்ணப் பூ'
Beluisterdபல்திறன் கொண்ட இசைக்கலைஞர் அருண் குமாரசாமி அவர்களின் முன்னெடுப்பில் ‘அஞ்சுவண்ணப் பூவே’ என்ற ஒரு இசை நிகழ்ச்சி அக்டோபர் 24ம் திகதி சனிக்கிழமை மெல்பன் நகரில் நடக்கவிருக்கிறது. அவரது இசைப் பயணம் குறித்தும், நடக்கவிருக்கும் நிகழ்ச்சி குறித்தும் அருண் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலியத் தமிழ்ச் சமூகமும் குடும்ப வன்முறையும்: அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளும், தகவல்களும்
Beluisterdஆஸ்திரேலியச் சமூகங்களில் குடும்ப மற்றும் குடும்ப உறவுகளுக்குள் இடம்பெறும் வன்முறை ஒரு முக்கியமான பிரச்சினையாகத் தொடர்கிறது. குடும்ப வன்முறையின் பல்வேறு வடிவங்கள் என்ன? வன்முறைக்கான எச்சரிக்கை அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காண்பது? வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் உதவியையும் ஆதரவையும் பெற என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட பல கேள்விகளோடு பிரிஸ்பேனில் உள்ள 4EB தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் SBS தமிழ் ஒலிபரப்புக்காக இந்த கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்டது. கலந்துகொண்டவர்கள்: குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கார்த்திக் இளங்கோவன், சமூக ஆர்வலர் தேவி பழனிச்சாமி, குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கத்தின் துணைக் குழுவான Femisphere அமைப்பின் துணைஒருங்கிணைப்பாளரும், Registered Nurse, குடும்ப வன்முறைத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரியுமான ஸ்ரீமதி நாராயணன் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். Family and domestic violence remains a serious concern in Australian communities, affecting individuals and families regardless of their cultural or social backgrounds. What are the different forms of family and domestic violence?…
வேலையற்றோர் விகிதம் அதிகரிப்பதால் குடியேற்றத்தில் எழும் புதிய சவால்கள்!
Beluisterdஆஸ்திரேலியாவில் வேலையற்றோர் விகிதம் அதிகரித்து வருவதால், திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கவரும் நாட்டின் முயற்சிகளுக்குச் சவால் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast New challenges arising from the rising unemployment rate
இன்றைய செய்திகள்: 19 அக்டோபர் 2026 - திங்கட்கிழமை
BeluisterdSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/10/2026) செய்திகள். வாசித்தவர் றேனுகா துரைசிங்கம்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
Beluisterdரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத் கடத்தல்; சிக்கிய தவெக நிர்வாகி; சென்னையில் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை; காங்கிரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (11 – 17 அக்டோபர் 2026)
Beluisterdஆஸ்திரேலியாவின் இந்த வார (11 – 17 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (11 – 17 October 2026)
குயின்ஸ்லாந்து பெண் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இந்தியர் மேல்முறையீடு
Beluisterdகுயின்ஸ்லாந்தில் இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்விந்தர் சிங், தனது குற்றத் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
Are immigration cuts an economic solution or a political strategy? - ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்த அறிவிப்பும் தற்போதைய விவாதமும்!
BeluisterdAustralia's immigration debate has shifted dramatically. Despite no imminent federal election, both major parties are backing policies to reduce migration numbers and limit international students. - ஆஸ்திரேலியாவில் தற்போது குடியேற்றம் குறித்துப் பலரும் பேசுவதையும் விவாதிப்பதையும் நாம் காண்கிறோம். ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்து கட்சிகள் தங்களின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த விவாதங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. #sbsaudiopodcast - #sbsaudiopodcast
நாட்டின் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள்: சேமிப்பு வட்டி, வீட்டு விலை, நுகர்வோர் உரிமை
Beluisterdஅவுஸ்திரேலியாவில் வங்கிச் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி வீதம் ஆறு சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டு விலைகள் மற்றும் முதலீட்டுச் சந்தையிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதேவேளை, தொலைபேசி, இணையம் மற்றும் சமூக ஊடகச் சேவைகள் தொடர்பான நுகர்வோர் புகார்களைத் தீர்ப்பதற்கான புதிய அதிகாரங்கள் குறித்த கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 16 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை
BeluisterdSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (16 October 2026 - Friday)
2026 நோபல் பரிசுகள்: உலகை மாற்றிய சாதனையாளர்கள் யார்?
Beluisterdநோபல் பரிசுகள் (2026) அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் உலக அளவில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவருமான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நோபல் பரிசுகளைப் பெறுபவர்கள் யார்? எந்தச் சாதனைகளுக்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து விளக்கமாகத் தொகுத்து வழங்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். 2026 Nobel Prizes: Who are the people changing the world?
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 10 – 16, 2026)
Beluisterdஇலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 10 – 16) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 10 – 16, 2026)
யானைச் சாணத்தால் செய்யப்பட்ட பொருளுடன் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா வந்த பயணி
Beluisterdஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு யானைச் சாணத்தால் செய்யப்பட்ட Fridge Magnets-ஐ பயணி ஒருவர் கொண்டுவந்தமை குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
Stroke-பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது?
BeluisterdStroke/பக்கவாதம் என்பது ஒருவரின் வாழ்க்கையைத் திடீரெனப் புரட்டிப்போடக்கூடிய ஒரு மருத்துவ அவசரநிலை. பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள், எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கிறார் மருத்துவர் சுமிதா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast
திரைக்கு வருவதற்கு முன்பே தேசிய விருது வாங்கிய திரைப்படம்
Beluisterdதிரைக்கு வருவதற்கு முன்பே 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்திற்கான இந்திய அரசின் தேசிய விருது பெற்ற திரைப்படமான “To Let" திரைப்படத்தின் இயக்குனர் செழியன் அவர்களுடன் ஒரு நேர்காணல். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Interview with Chezhiyan, the director of "To Let" movie
Payday Super: மூன்றே மாதங்களில் இரட்டிப்பான சூப்பர் கொடுப்பனவுகள்
BeluisterdSuperannuation ஓய்வூதியநிதியில் சேர வேண்டிய தொகை இப்போது சம்பளம் கொடுக்கப்படும் போதே செலுத்தப்படுகிறது. இந்த மாற்றம், ஓய்வூதிய சேமிப்பு மற்றும் செலுத்தத் தவறிய தொகைகளைக் கண்டறிவதில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 15 அக்டோபர் 2026 - வியாழக்கிழமை
BeluisterdSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 15/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
எக்கிட்னா: ஆஸ்திரேலியாவின் முள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆச்சரியங்கள்
Beluisterdஎக்கிட்னா ஆஸ்திரேலியாவின் மிகவும் வித்தியாசமான உயிரினங்களில் ஒன்று. அதன் அபூர்வமான வாழ்க்கை முறை மற்றும் தனிச்சிறப்புகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். இந்த நிகழ்ச்சி முதலில் 2019 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது; தற்போது மீண்டும் போட்காஸ்டாக வழங்கப்படுகிறது. Echidna: Australia’s fascinating spiny mammal
தற்காப்புக்காக pepper spray பயன்படுத்த நிரந்தர அனுமதி வழங்கும் ஆஸ்திரேலியப் பிராந்தியம்!
BeluisterdNorthern Territoryஇல் தற்காப்புக்காக Pepper Spray பயன்படுத்துவதற்கான அனுமதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast
Highest Ranking Students of Tamil in Western Australia - மேற்கு ஆஸ்திரேலிய உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த மூவர்
BeluisterdIn Western Australia, Tamil language is offered as a subject in WACE. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. Top achievers in Tamil Continuers course were Surya Ruba Rishikandhan, Dharshigaa Gaya, and Rudhra Prabhanya V Prabhakar. - மேற்கு ஆஸ்திரேலிய மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு WACEயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் தேர்வாகியிருந்த சூரியா ரூபா ரிஷிகாந்தன், இரண்டாம் மூன்றாம் இடங்களில் வந்திருந்த தர்ஷிகா கயா, ருத்ரபிரபண்யா வே. பிரபாகர் மற்றும் இவர்கள் மூவரும் கற்ற தெற்குத் தமிழ் பாடசாலையின் அதிபர் சிவமைந்தன் கமலநாதன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
One of the highest-Ranking Student of Tamil, Rudhra Prabhanya V Prabhakar - தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மூவரில் ஒருவரான ருத்ரபிரபண்யா வே. பிரபாகர்
BeluisterdIn Western Australia, Tamil language is offered as a subject in WACE. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. One of the top achievers in Tamil Continuers course, Rudhra Prabhanya V Prabhakar talks to Kulasegaram Sanchayan.. - மேற்கு ஆஸ்திரேலிய மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு WACEயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் மூன்றாவது இடத்தில் தேர்வாகியிருந்த ருத்ரபிரபண்யா வே. பிரபாகர் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுவோருக்கு என்னென்ன தெரிவுகள் உள்ளன?
Beluisterdஇளம் வயதிலேயே கருமுட்டைகளை அல்லது விந்தணுக்களை உறைநிலையில் சேமித்து வைப்பது எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குமா, யாரெல்லாம் இதனைப் பரிசீலிக்கலாம், இதன் நன்மைகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் மருத்துவ வாய்ப்புகள் குறித்து பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த Gynaecologist and Fertility Specialist- மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு தொடர்பான நிபுணர் Dr பிரியா ராஜகோபால். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் தொடரும் சவால்கள் என்ன?
Beluisterdஆஸ்திரேலியாவில் குடியேறும் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த பின்னணியில் பிரிஸ்பேனில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் சுகன்யா, நதியா சந்திரசேகரன், சங்கர் ஜெயபாண்டியன் ஆகியோர் இத்தகைய சவால்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலி ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து SBS தமிழ் ஒலிபரப்புக்காக உரையாடியவர் றைசெல். Living in Australia for years: What challenges remain?
வீட்டுக்கான காப்புறுதி (Insurance) கட்டணம் உயர்கிறது! ஏன்?
Beluisterdசூழல் வெப்பமடைந்து வருவதாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக வலிமையான ‘எல் நினோ’ உருவாகும் என கணிக்கப்பட்டிருப்பதாலும், காட்டுத்தீ அச்சுறுத்தல்களின் அடிப்படையில் இந்தக் கோடைக்காலம் எப்படி இருக்குமோ என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஏற்படக்கூடிய அபாயத்திற்காகத் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் மக்கள் தயார்படுத்தி வருகின்றனர். சிலர் காட்டுத்தீயைத் தடுக்கும் பொருட்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான டொலர்களைச் செலவிடுகின்றனர். சில சமயங்களில், நில உரிமையாளர்கள் தங்கள் சமூகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். மேலும், தாங்கள் செய்துள்ள பணிகள் காப்பீட்டு பிரீமியங்களில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். Kerrin Thomas மற்றும் Charis Chang எழுதிய சிறப்பு விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
இன்றைய செய்திகள்: 14 ஒக்டோபர் 2026, புதன்கிழமை
BeluisterdSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
சுமார் 43 வருடங்களாக நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்கள்
Beluisterdஇலங்கையில் கடந்த 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற ஜூலை கலவரத்திற்கு அரசிடம் நீதிவிசாரணையை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Tamil people still waiting for justice after nearly 43 years
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற இயற்கை அதிசயத்தை காண இனி முன்பதிவு அவசியம்
Beluisterdவிக்டோரியா மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான Twelve Apostles பாறைகளைக் காண இனி முன்பதிவு அவசியம்; நுழைவுக் கட்டணமும் அறிமுகமாகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
நியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களில் புதிய மாற்றம்
Beluisterdநியூ சவுத் வேல்ஸ் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தும் முறையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast
இன்றைய செய்திகள்: 13 அக்டோபர் 2026 - செவ்வாய்க்கிழமை
BeluisterdSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/10/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
How laws are made, and how they affect you | How Australia Works - சட்டங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன, உங்களை எவ்வாறு பாதிக்கின்றன|ஆஸ்திரேலியா எவ்வாறு செயல்படுகிறது?
BeluisterdHow are laws made in Australia? Through Wurundjeri Elder Uncle Dave Wandin’s story of the Birrarung, also known as the Yarra River, learn how an idea becomes a bill, passes through Victoria’s parliament and receives royal assent, the formal approval that makes it law. - ஆஸ்திரேலியாவில் சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? யர்ரா நதி என்றும் அழைக்கப்படும் பரரங் பற்றிய வுருண்ட்ஜெரி மூத்தவரான David Wandin, அவரை Uncle Dave என்று பலரும் அழைப்பார்கள். Uncle Daveஇன் கதையின் மூலம், ஒரு யோசனை எவ்வாறு சட்ட முன்வரைவாக மாறுகிறது, விக்டோரிய மாநில நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதைச் சட்டமாக்கும் முறையான ஒப்புதலான அரச ஒப்புதலைப் பெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to the series and find shorter versions in 60 languages on the How Australia Works main page. - How Australia Works என்பது ஒரு SBS வலையொலி (podcast)…
Money Laundering என்றால் என்ன? மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி?
BeluisterdMoney Laundering என்றால் என்ன? சாதாரண பொதுமக்களும் சர்வதேச மாணவர்களும் இது குறித்து ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்? மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்? மோசடிகளில் சிக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Money Laundering தடுப்பு தொடர்பாக சான்றிதழ் பெற்ற நிபுணரும் ஆலோசகருமான Karthick Elangovan அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். பிரிஸ்பேன் 4EB ஒலிப்பதிவு கூடத்தில் இந்த நேர்முகம் பதிவு செய்யப்பட்டது. What is money laundering, and how can you protect yourself from scams?